கர்நாடக துணை சபாநாயகர் சாவு ஒரு அரசியல் படுகொலை.. குமாரசாமி குற்றச்சாட்டு..

கர்நாடக மேலவைத் துணைச் சபாநாயகர் தர்மேகவுடா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் அரசியல் படுகொலை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் சட்டமேலவையின் துணைச் சபாநாயகராக தர்மேகவுடா இருந்து வந்தார். அவர் நேற்று சகாராபட்டினாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தார். Read More


எடியூரப்பா மகன் ஊழல்.. கர்நாடக பாஜக தள்ளாட்டம்

கர்நாடகா பாஜக அரசில் உயர் அதிகாரிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணிமாற்றங்களை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமித்ஷாவுக்கு புகார் சென்றுள்ளது. Read More


சந்திரயான் தொடர்பு துண்டானதற்கு மோடியின் பேட் லக் காரணமோ? குமாரசாமி கமென்ட்..

சந்திரயான்-2 திட்டத்தில் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பு துண்டானதற்கு மோடி கொண்டு பேட் லக் தான் காரணமாக இருக்கலாம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கமென்ட் அடித்துள்ளார். Read More


எடியூரப்பா அரசுக்கு மஜத ஆதரவா? - இல்லவே இல்லை என்கிறார் குமாரசாமி

கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளிக்கப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி மறுத்துள்ளார். Read More


'அரசியலில் நிரந்தர நட்புமில்லை; பகையுமில்லை' எடியூரப்பாவுக்கு வலிய ஆதரவு தர மஜத முடிவு?

அரசியலில் நட்போ , பகையோ நிரந்தரமில்லை என்பது கர்நாடக அரசியல்வாதிகளுக்கு ஏகப் பொருத்தமாகிவிட்டது போலும். பாஜகவின் சதியால் ஆட்சியை இழந்த குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம், இப்போது எடியூரப்பாவுக்கு ஆதரவு தரப்போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


முடிவுக்கு வந்தது கர்நாடகா 'நாடகம்' ; குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

கடந்த 17 நாட்களாக கர்நாடகாவில் நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். Read More


கர்நாடக சட்டசபைக்கு வராத முதல்வர் மற்றும் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் ; சபாநாயகர் கோபம்

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் முதல்வர் குமாரசாமி மற்றும் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பெரும்பாலான ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் இன்று சட்டசபைக்கு வரவில்லை.ஆளும் கட்சி தரப்பில் இருக்கைகள் காலியாக கிடப்பதைப் பார்த்த சபாநாயகர் கோபமடைந்து எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Read More


கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தாமதம்; திடீரென ஒத்திவைக்கப்பட்டதால் பரபரப்பு

கர்நாடக சட்டப்பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது தாமதமாகியுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக காங்கிரஸ் பிரச்னை எழுப்பி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் சபையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட மதிய உணவு இடைவேளைக்காக பேரவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதனால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்து கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More


'நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தப்புமா..?'- கர்நாடகத்தில் உச்சகட்ட பரபரப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை 11 மணி நடைபெற உள்ள நிலையில், ஆட்சி தப்பிப் பிழைக்குமா? கவிழுமா? என்ற உச்சகட்ட பரபரப்பு கர்நாடக அரசியலில் நிலவுகிறது. Read More


குமாரசாமி அரசு இன்றே நம்பிக்கை வாக்கு கோரவேண்டும்; கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக அமளி - நாளை வரை ஒத்திவைப்பு

கர்நாடகாவில் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் குழப்பங்களுக்கு முடிவு கட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என முதல்வர் குமாரசாமி திடீரென அறிவித்த நிலையில், இன்றே சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்திய பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவு வந்த பின் நாளை முடிவெடுப்பதாகக் கூறி சட்டப்பேரவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர். Read More