எடியூரப்பா அரசுக்கு மஜத ஆதரவா? - இல்லவே இல்லை என்கிறார் குமாரசாமி

Karnataka politics, HD Kumaraswamy dismisses talks of JDU support to Yediyurappa government

by Nagaraj, Jul 28, 2019, 10:36 AM IST

கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளிக்கப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி மறுத்துள்ளார்.


குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசை கவிழ்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது பாஜக .கடைசியில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ க்கள் 15 பேரை ராஜினாமா செய்ய வைத்து கச்சிதமாக பாஜக காய் நகர்த்தி விட்டது. இதனால் பெரும்பான்மை இழந்த குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து விட்டது.


இதனால் கூடுதல் எம்எல்ஏக்கள் பலத்தைக் காட்டி எடியூரப்பா 4 -வது முறையாக முதல்வராகி விட்டார். நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் எடியூரப்பா தயாராகி விட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் தற்போதைக்கு சிக்கல் இல்லை. ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகரின் முடிவு என்ன என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.


இந்த விவகாரத்தில் இதுவரை 3 எம்எல்ஏக்கள் மீது மட்டுமே தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. எஞ்சியுள்ள 13 பேரின் ராஜினாமா விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இவர்களின் ராஜினாமாக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலோ அல்லது தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ, சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் பலம் 209 ஆக குறைந்து விடும். அப்போது மெஜாரிட்டிக்கு 105 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக வசமே அந்த எண்ணிக்கை உள்ளது.
ஆனால் ராஜினாமா செய்த 15 எம்எல்ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் முடியும் வரை எடியூரப்பா அரசு மைனாரிட்டி அரசாகவே நீடிக்க வேண்டிய சூழலும், இடைத்தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயமும் எடியூரப்பா அரசுக்கு உள்ளது.


இந்நிலையில் தான் எடியூப்பாவுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வெளியில் இருந்து ஆதரவுக் கரம் நீட்டப் போவதாக நேற்று செய்திகள் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அக்கட்சி எம்எல்ஏக்களில் பலர், எடியூரப்பா அரசை வெளியில் இருந்து ஆதரிப்பதால், தங்கள் தொகுதிகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை எளிதில் நிறைவேற்ற முடியும். தங்களுக்கு தேவையான காரியங்களையும் எளிதாக சாதிக்க முடியும். எனவே எடியூரப்பா அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என சில மஜத எம்எல்ஏக்கள் கூறியதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான ஜி.டி.தேவகவுடா பகிரங்கமாக தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து முடிவெடுக்க வேண்டியது குமாரசாமியும், அவருடைய தந்தை தேவகவுடாவும் என்றும் அவர் கொளுத்திப் போட்டிருந்தார்.


இந்நிலையில் பாஜக அரசுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு என வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது என்றும் அதில் உண்மை இல்லை என்றும் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.ஆதாரமற்ற இந்தச் செய்திகளை கட்சியினர் யாரும் நம்ப வேண்டாம் எனவும் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதே போன்று குமாரசாமியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கர்நாடக மக்களுக்கு எடியூரப்பா அரசு நல்லது செய்தால் வரவேற்போம். குமாரசாமி இருந்து தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு சட்டமன்றத்தின் ஒப்புதல் தேவை என்பதால் அந்த மசோதாவை மஜத ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மற்றபடி எடியூரப்பா அரசுக்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேவகவுடா தெரிவித்துள்ளார்.

You'r reading எடியூரப்பா அரசுக்கு மஜத ஆதரவா? - இல்லவே இல்லை என்கிறார் குமாரசாமி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை