அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் காலமானார்!

உலகின் மிகச்சிறந்த அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் இன்று காலை இயற்கை எய்தினார்.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த உலகின் மிகச்சிறந்த அறிவியலாளராகக் கருதப்படும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் இன்று காலை இயற்கை மரணம் அடைந்தார். இத்தகவலை ஹாக்கிங்ஸ் குடும்பத்தார் உறுதிபடுத்தியுள்ளனர். ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் பிள்ளைகள் ராபர்ட் மற்றும் டிம் இதுகுறித்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள குறிப்பில், "எங்கள் அன்பிற்குரிய தந்தை இன்று காலை காலமானார். அவர் ஒரு சிறந்த அறிவியலாளர். அவரது பெருமையும் சேவையும் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது விடாமுயற்சியும் நகைச்சுவை உணர்வுமே அவரை உலகமெங்கும் சிறந்த மனிதராக அறிமுகப்படுத்தியது. அவரது இழப்பு மிகப்பெரியது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

டைம் மெஷின், பிளாக் ஹோல், ஏலியன், பிக்பேங் தியரி என அண்ட அறிவியலின் பல மைல்கல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் ஹாக்கிங்ஸ். இமேஜினரி டைம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இவர் எழுதிய "எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்" என்ற புத்தகம், தமிழ் உட்பட 35 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தி யுனிவர்ஸ் இன்  எ  நட் ஷெல், மை ப்ரீஃப் ஹிஸ்டரி உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் காலமானார்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுவையான தேங்காய்ப் பால் பாயசம்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்