பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் காரணம்- ஒப்புக்கொண்ட நவாஸ் ஷெரிப்!

மும்பை தாக்குதல் பாகிஸ்தான் தீவிரவாதிகளாலே நடத்தப்பட்டது என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பை நகரைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தியாவின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் முக்கிய நகரான மும்பையில் ஒரே நேரத்தில் பல இடங்களில் தீவிரவாதிகள் மூன்று நாட்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

கடல் வழியே மும்பைக்குள் நுழைந்த பத்து தீவிரவாதிகளால் 166 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். சர்வதேச தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், வழக்கில் எந்தவொரு நகர்தலும் இல்லை.

காரணம், பாகிஸ்தான் தரப்பிலிருந்து எந்தவொரு ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. இதுநாள் வரையில் மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் என பாகிஸ்தான் கேட்பது போலவே அதன் செயல் இருந்தது.

ஆனால், தற்போது முதன்முறையாக லண்டனில் உள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் இதுகுறித்து ஒரு பேட்டியில், “ஆமாம், பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் மும்பை தாக்குதலை நடத்தியது. நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்.

ஆனால், தீவிரவாதத்தை பாகிஸ்தானும் எதிர்க்கிறது என்பது உலக நாடுகள் புரிந்துகொள்ள மறுக்கின்றன. இன்று பாகிஸ்தான் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் காரணம்- ஒப்புக்கொண்ட நவாஸ் ஷெரிப்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ‘ஸ்டார்பக்ஸ் பொது கழிப்பறையல்ல’ - என்ன சொல்கிறது நிர்வாகம்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்