எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வாக்குறுதி- 67 ஆயுள் கைதிகள் விடுதலை!

தமிழக சிறைகளில் இருக்கும் 67 ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமசந்திரனின் 100- வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `நல்லெண்ண அடிப்படையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருக்கும் 67 ஆயுள் கைதிகள், நல்லெண்ண அடிப்படையில் சீக்கிரமே விடுவிக்கப்படுவர்' என்று தெரிவித்தார்.

இந்நிலையல், பிப்ரவரி 25-ம் தேதியின் அடிப்படையில் 10 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் கைதிகள் விடுவிக்கப்பட அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இரண்டு அரசாணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அந்த அரசாணைகளில் கைதிகளை வெளியிடுவதற்கு உண்டான விதிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வாக்குறுதி- 67 ஆயுள் கைதிகள் விடுதலை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குஜராத்தின் பழமையான விமானம் விபத்து: ஒருவர் பலி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்