கல்விக்கு உதவும் கடமை வீரர்!- சந்தீப் ஐபிஎஸ்!

தென் ஜம்முவில் சூப்பரிண்டண்ட் அதிகாரியாகப் பணியாற்றி வரும் சந்தீப் ஐபிஎஸ் 2012 ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டவர்.

தனது அலுவலக வேலை முடிந்த பின்னரும் காலையில் தனது அலுவலகப் பணி தொடங்கும் முன்னரும் அப்பகுதியைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார். ஆனால், சில நாள்களிலேயே அந்த எண்ணிக்கை 150 மாணவர்களாக வளர்ந்தது.

சிவில் சர்வீஸ் தேர்வுகள், வங்கிப் பணித் தேர்வுகள், காவல்துறை பணியாளர் தேர்வுகள் என பள்ளித் தேர்வுகளில் இருந்து அரசுப் பணித் தேர்வுகள் வரையில் அனைத்துக்கும் மாணவ்ர்கள் சந்தீப்பைத் தான் தேசி வருகின்றனர்.

முதலில் தனது வீட்டின் அருகில் பாடம் எடுத்து வந்த சந்தீப், மாணவர்கள் அதிகமாக வரத் தொடங்கிய உடன் தனது அலுவலகம் அருகே நல்ல எண்ணம் கொண்ட ஒருவர் வழங்கிய இலவச இடத்தில் தனது வகுப்புகளை எடுக்கத் தொடங்கினார்.

சந்தீப்பின் செயலைப் பாரட்டிய நண்பர்கள், அலுவலக அதிகாரிகள் என அனைவரும் சந்தீப்பின் செயலுக்கு அவரவருக்கு முடிந்த வரையில் உதவி செய்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading கல்விக்கு உதவும் கடமை வீரர்!- சந்தீப் ஐபிஎஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உயரிய ஆப்பிள் விருது வென்ற தமிழர்! தொழில்நுட்பத்துக்கான அடையாளம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்