டிரம்ப் மகள் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா ?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவாங்கா, அவரது கணவரும் அதிபரின் மருமகனுமான ஜாரெட் குஷ்னர் இருவரின் வருமானத்தை பற்றிய விவரத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
2017-ம் ஆண்டு வருமான கணக்கின்படி, இருவரும் இணைந்து குறைந்தது 82 மில்லியன் டாலர் சம்பாதித்திருக்கின்றனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
 
வாஷிங்டனில் உள்ள டிரம்ப் இண்டர்நேஷனல் ஹோட்டல் பங்குகளிலிருந்து இவாங்கா 3.9 மில்லியன் டாலரை பெற்றிருக்கிறார். டிரம்ப் நிறுவனங்களை விட்டு விலகியதற்காக பங்கு தொகையாக 2 மில்லியன் டாலர் பெற்றிருக்கிறார். இவாங்காவின் கணவர், குஷ்னர், ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் 5 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார்.
 
இவாங்காவும் அவரது கணவரும் தற்போது வெள்ளை மாளிகையில் முதுநிலை ஆலோசகர்களாக இருந்து வருகின்றனர். அதிபர் மாளிகையில் பணியாற்றுவதற்காக, இருவரும் முன்பு தாங்கள் நிர்வகித்து வந்த வர்த்தக நிறுவனங்களிலிருந்து விலகி விட்டனர். இருந்தபோதும் அறக்கட்டளைகள், பல்வேறு முதலீடுகள் மூலம் கிட்டத்தட்ட 80 வர்த்தக பரிவர்த்தனைகள் இருவருக்கும் உள்ளன. அதன் மூலம் 2017-ம் ஆண்டில் குறைந்தது 82 மில்லியன் டாலரிலிருந்து 222 மில்லியன் டாலர் வரைக்கும் இருவரும் வருமானம் ஈட்டியிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
 
இவாங்கா, குஷ்னர் இருவரின் அரசாங்க நெறிமுறைக்கான ஆலோசகர் ஏப் லோவெலின் செய்தி தொடர்பாளர், "நிர்வாகத்தில் சேர்ந்துள்ளதால், அரசாங்க அலுவலகத்திற்குரிய எல்லா நெறிமுறைகளும் சட்டங்களும் இருவருக்கும் பொருந்தும். அவர்களது நிலையான சொத்து மதிப்பில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை" என்று கூறியுள்ளார்.

You'r reading டிரம்ப் மகள் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா ? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தந்தைக்கான சவப்பெட்டியின் விலை 60 லட்சம்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்