பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

கடந்த பிப்ரவரி மாதம் பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு பதிவு எண் கொண்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பெரியார் பல்கலைக்கழகத்துக்கான தொலைதூரக் கல்விக்குத் தேர்ந்தெடுப்பதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுவது தான் ‘ப்ரைட்’ தேர்வுகள்.

பெரியார் பல்கலைக்கழகம் சமூக மறுமலர்ச்சியாளர் பெரியாரின் நினைவாக பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி முறையைத் தான் அப்பல்கலைக்கழகம் ‘ப்ரைட்’ எனச் சுருக்கி அழைத்து வருகிறது. கடந்த 2001- 2002 கல்வி ஆண்டில் இத்தொலைதூரக் கல்வித் திட்டம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் ஆனது. பல்வேறு விதமான இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் இங்கு பயிற்றுவிக்கப் படுகின்றன.

தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள,www.periyaruniversity.ac.in என்ற இணைய தள முகவரியைக் காணலாம்

You'r reading பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வளர்ச்சியில் டிசிஎஸ் நிறுவன பங்குகள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்