இனி டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் ஆன்லைனில் நடத்த முடிவு

தமிழக அரசு பணிகளுக்கு இனி ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.

தமிழகத்தின் கீழ் உள்ள பல்வேறு அரசு துறைகளில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தி பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்த தேர்வுகள் இதுவரை எழுத்துமூலமாகவே நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இனி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தும் பணிகளை தனியாரிடம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, தனியாரிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதனை ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 3 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிட முடியும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You'r reading இனி டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் ஆன்லைனில் நடத்த முடிவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருமணம் செய்துகொள்ளாததற்கு இதுவே காரணம்: தபு ஓபன் டாக்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்