இளம் மனைவியுடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு - நீதிமன்றம் அதிரடி

18 வயது நிரம்பாத இளம் மனைவியுடன், உடலுறவு வைத்துக் கொண்டால், அது பாலியல் வன்புணர்வாகவே கருதப்படும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

18 வயது நிரம்பாத இளம் மனைவியுடன், உடலுறவு வைத்துக் கொண்டால், அது பாலியல் வன்புணர்வாகவே கருதப்படும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை திருமணத்தை தடுக்கக் கோரி பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த மனுவில் திருமணம் முடிக்கும் இளம் பெண்கள் சரியான வயதை எட்டும் முன்பே, அவர்கள் கருவைச் சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொண்டிருந்தாலும், அவர்களுடன் உடலுறவு கொண்டால் அது உடல் ரீதியிலான துன்புறுத்தலாகவே கருதப்படும் என்றும், இது தொடர்பாக புகார் அளித்தால் அதனை பாலியல் பலாத்காரமாக வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

You'r reading இளம் மனைவியுடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு - நீதிமன்றம் அதிரடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிபரை கொலை செய்யும் திட்டம்; திருடிய வட கொரிய ஹேக்கர்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்