தொடர் வீழ்ச்சியில் இந்திய ரூபாய் மதிப்பு!

இந்திய  ரூபாய் மதிப்பு சமீப காலமாகக் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவது இந்தியப் பொருளாதார மேம்பாடுக்கு சரியானது அல்ல எனப் பொருளாதார் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச பொருளாதார  மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாகவும் இந்தியாவில் நிகழும் உள்நாட்டு வர்த்தக குழப்பங்களாலும், நிதி மோசடிகளாலும் இந்தியப் பங்குச்சந்தை சில காலமாகக் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதன் நீட்சியாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் அதள பாதளத்தில் வீழ்ந்துள்ளது.

சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி நிரவ் மோடியின் மோசடியால் இந்தியப் பங்குச்சந்தை மேலும் மோசமான நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 58 பைசா வீழ்ந்துள்ளது. சமீபத்திய நிலவரத்தின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 பைசா வீழ்ந்து 64.54 பைசா என உள்ளது.

இந்த நிலை இந்தியப் பொருளாதாரத்தை மேலும் வீழ்ச்சிப் பாதையிலேயே கொண்டு செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

You'r reading தொடர் வீழ்ச்சியில் இந்திய ரூபாய் மதிப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மனைவி அனுஷ்காவைக் கொண்டாடும் விராட்- வைரலாகும் காதல் முத்தம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்