வீழ்ச்சியில் ஐடி பங்குகள்...சரியும் இந்தியப் பங்குச்சந்தை!

இந்தியப் பங்குச்சந்தை இன்று காலை திடீரென சரியத் தொடங்கியது வர்த்தகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மார்ச் மாத வர்த்தகத்தின் இறுதி வேலை நாளான இன்று மும்பையில் உள்ள வர்த்தக மையம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த நிதியாண்டின் இறுதி வாரத்தில் கடந்த இரண்டு நாள்களாக நிஃப்டி ஏற்ற இறக்கத்திலே இருந்து வந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொழில்நுட்பப் பிரிவில் சீன இறக்குமதி தொடர்பான நடைமுறைகளை முறைப்படுத்த உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பை அடுத்து உலக வர்த்தகமே ஆட்டம் கண்டுள்ளது.

உலகச் சந்தைகளில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மை, சர்வதேச அரசியல் சூழல், சந்தை நிலவரத்தின் முக்கியக் காரணியான கச்சா எண்ணெய் விலையேற்றம் எனப் பல காரணிகளாலும் இந்தியப் பங்குச்சந்தை நிதியாண்டின் இறுதி நாளில் வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பஙுச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 143.16 புள்ளிகள் சரிந்து 32,506 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 43.80 புள்ளிகள் சரிந்து, 10,140 புள்ளிகளாக உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading வீழ்ச்சியில் ஐடி பங்குகள்...சரியும் இந்தியப் பங்குச்சந்தை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சீனா- வடகொரியா இடையில் பேச்சுவார்த்தை! உறுதிசெய்த சீன அரசு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்