டூயல் ரியர் காமிரா, 256 ஜிபி வரை உயர்த்தும் வசதி: ஆப்போ ஏ12 போன் விலைகுறைப்பு

கடந்த ஜூன் மாதம் ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டூயல் ரியர் காமி மற்றும் வாட்டர்டிராப்ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் உடன் இது விற்பனைக்கு வந்தது. கறுப்பு மற்றும் நீலம் இரு வண்ணங்களில் ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போன் உள்ளது.
3ஜிபி+32ஜிபி கொண்ட ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போன் ரூ.8,990/- ரூபாய்க்கும், 4ஜிபி+64ஜிபி ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போன் ரூ.11,490/- விலையிலும் விற்பனையாகி வந்தது. தற்போது இவற்றில் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
சிம்: இரட்டை நானோ சிம்
தொடுதிரை: 6.22 அங்குலம் எச்டி+; 720X1520 பிக்ஸல் தரம்
இயக்கவேகம்: 3 ஜிபி மற்றும் 4 ஜிபி
சேமிப்பளவு: 32 ஜிபி மற்றும் 64 ஜிபி (மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி 256 ஜிபியாக உயர்த்தலாம்)
முன்புற காமிரா: 5 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி ஆற்றல் (டூயல் ரியர் காமிரா)
பிராசஸர்: ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 SoC
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை; கலர்ஓஎஸ் 6.1
மின்கலம்: 4320 mAh
எடை: 165 கிராம்
4ஜி VoLTE, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், பின்புறம் விரல் ரேகை உணரி உள்ளது.
ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போனில் 3ஜிபி+32ஜிபி வகையானது தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.8,490/- விலையிலும் 4ஜிபி+64ஜிபி வகையானது தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.10,990/- விலையிலும் விற்பனையாகிறது.

You'r reading டூயல் ரியர் காமிரா, 256 ஜிபி வரை உயர்த்தும் வசதி: ஆப்போ ஏ12 போன் விலைகுறைப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்