டிரிபிள் ரியர் காமிரா 6000 mAh பேட்டரி: போகோ எம்3 பிப்ரவரி 9 முதல் விற்பனை

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போகோ எம்2 ஸ்மார்ட்போனை தொடர்ந்து போகோ எம்3 கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வண்ணங்களில் இது கிடைக்கும். ரியல்மீ 7ஐ, சாம்சங் கேலக்ஸி எம்11 மற்றும் மோட்டோரோலா ஜி9 பவர் ஆகியவற்றுக்குப் போட்டியாக போகோ எம்3 அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போகோ எம்3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
சிம்: நானோ இரட்டை சிம்
தொடுதிரை: 6.53 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2340 பிக்ஸல்); கார்னிங் கொரில்லா கிளாஸ்; 19.5:9 விகிதாச்சாரம்
இயக்கவேகம்: 6 ஜிபி
சேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி மூலம் 512 ஜிபி ஆக அதிகரிக்கலாம்)
முதன்மை காமிரா: 8 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ஆற்றல் (டிரிபிள் ரியர் காமிரா)
பிராசஸர்: ஆக்டா-கோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 662 SoC
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
மின்கலம்: 6000 mAh
சார்ஜிங்: 18W
எடை: 198 கிராம்

4ஜி VoLTE, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், அகச்சிவப்பு (ஐஆர்) பிளாஸ்டர், யூஎஸ்பி டைப்-சி, பக்கவாட்டில் விரல்ரேகை (fingerprint) உணரி ஆகியவை கொண்ட போகோ எம்3 ஸ்மார்ட்போனின் 6ஜிபி+64ஜிபி சாதனம் ரூ.10,999/- விலையிலும் 6ஜிபி+128ஜிபி சாதனம் ரூ.11,999/- விலையிலும் பிப்ரவரி 9ம் தேதி நண்பகல் 12ம் தேதி முதல் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனையாகும். கூல் புளூ, போகோ யெல்லோ மற்றும் பவர் பிளாக் நிறங்களில் இதை வாங்கலாம்.

You'r reading டிரிபிள் ரியர் காமிரா 6000 mAh பேட்டரி: போகோ எம்3 பிப்ரவரி 9 முதல் விற்பனை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்திய அணியில் இல்லாதது வருத்தம்தான்.. ஆனாலும்... நடராஜன் பீலிங்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்