வீழ்ச்சியில் பயணிக்கும் இந்தியப் பங்குச்சந்தை!

இன்றைய பங்குச்சந்தை வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் பங்குச்சந்தை குறீயீட்டு எண் சென்செக்ஸ் 37,534.95 புள்ளிகள் உடனும் நிஃப்டி 11,311.05 புள்ளிகள் உடனும் தொடங்கியது.

ஆனால், தொடக்கத்திலேயே வீழ்ச்சியில் ஆரம்பித்த பங்கு வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறீயீட்டு எண் சென்செக்ஸ் 151.14 புள்ளிகள் வீழ்ந்து அதாவது 0.40 சதவிகிதம் வீழ்ந்து 37,343.26 புள்ளிகள் உடனும் தேசிய பங்குச்சந்தை குறீயீட்டு எண் நிஃப்டி 39.50 புள்ளிகள் வீழ்ந்து அதாவது 0.35 சதவிகிதம் வீழ்ந்து 11,280.05 புள்ளிகள் உடன் பயணிக்கத் தொடங்கியது.

இன்றைய பங்குவர்த்தகத்தில் வீழ்ச்சிப் பாதையில் முன்னோடிகளாக ஐந்து நிறுவனங்கள் முன் நிற்கின்றன. 2.40 சதவிகிதம் வீழ்ந்து வேதாந்தா நிறுவனம் சரிவில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் 2.47 சதவிகித வீழ்ச்சியுடன் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபினான்ஸ், 2.26 சதவிகித சரிவில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், 1.96 சதவிகித வீழ்ச்சியில் பாரத் பெட்ரோலியம், 1.63 சதவிகித சரிவில் டாடா ஸ்டீல் நிறுவனம் உள்ளன.

You'r reading வீழ்ச்சியில் பயணிக்கும் இந்தியப் பங்குச்சந்தை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சமூக கட்டமைப்பு தவறு- பாலியல் குற்ற வழக்கில் நீதிமன்றம் வேதனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்