பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நி்ர்ணயித்து வந்தன. பின்னர், அவற்றின் விலை மாதம் இருமுறை என மாற்றி அமைக்கப் பட்டது.

கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்ய தொடங்கின. இதையடுத்து, தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது

இன்று பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் அதிகரித்து 81 ரூபாய் 35 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து 73 ரூபாய் 88 காசுக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வாடகை வாகன ஓட்டுநர்கள், வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

You'r reading பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எரிபொருள் விலை உயர்வு வீழ்ச்சிக்கே வித்திடும் - ராமதாஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்