இத்தாலியில் ஸ்டார்பக்ஸ் முதல் கடையை திறந்தது

இத்தாலியில் ஸ்டார்பக்ஸ் முதல் கடை

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வெள்ளியன்று தனது முதல் கடையை திறந்துள்ளது.

அமெரிக்காவின் சியாட்டிலை மையமாக கொண்டு இயங்கி வருவது ஸ்டார்பக்ஸ் காஃபி நிறுவனம். உலகமெங்கும் ஏறத்தாழ 29,000 ஸ்டார்பக்ஸ் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

பாரம்பரிய காஃபி பிரியர்களான இத்தாலி மக்களை கவரும் வண்ணமாக தற்போது மிலன் நகரில் 2,300 சதுர மீட்டர் பரப்பில் ஸ்டார்பக்ஸ் திறக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் தற்போது 57,000க்கும் மேற்பட்ட காஃபி கடைகள் உள்ளன. எஸ்பிரஸ்ஸோ என்னும் காஃபி இத்தாலியில் பிரபலமானது.

ஸ்டார்பக்ஸின் கௌரவ தலைவராக உள்ள ஹோவர்ட் ஸ்கல்ட்ஸ், 1983ம் ஆண்டு இத்தாலிக்கு வந்தபோது, தமக்கு காஃபி நிறுவனத்தை தொடங்க உத்வேகம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

சியாட்டில் மற்றும் ஷாங்காய் நகர்களில் உள்ளது போல காஃபி பதப்படுத்தும் அமைப்பினை ஸ்டார்பக்ஸ் இத்தாலியிலும் தொடங்கியுள்ளது.

உலகில் நான்காவது பெரிய நுகர்வோராக விளங்குவது இத்தாலி நாடு. இங்கு கடையை திறந்திருப்பதன் மூலம் ஹோவர்ட் ஸ்கல்ட்ஸின் கனவு நனவாகியுள்ளது.

You'r reading இத்தாலியில் ஸ்டார்பக்ஸ் முதல் கடையை திறந்தது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தொடர் உண்ணாவிரதம் எதிரொலி: ஹர்திக் பட்டேல் மருத்துவமனையில் அனுமதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்