சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு

தொடர்ந்து பெட்ரோல் டீசலின் விலை அதிகரித்துவரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் 2.89 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அவ்வப்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.59 உயர்த்தப்பட்டுள்ளது. மானியம் உள்ள சிலிண்டர் 2 ரூபாய் 89 காசு உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது என்று இந்தியன் ஆயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருப்பதால், மானியம் பெறும் பயனாளிகளுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை இந்த மாதத்தில் இருந்து ரூ.376.60 ஆக உயர்த்தப்படுகிறது. கடந்த மாதம் வரை இந்த மானியத்தொகை ரூ.320.49 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்துவருவது கவலை அளிப்பதாக இருக்கின்றது என்று மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

You'r reading சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டாஸ்மாக்கில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்