என்னுடைய தொழில் நடிப்பு மட்டுமே..... அரசியல் ஆர்வம் துளியும் இல்லை- தமிழிசைக்கு நடிகர் அஜித் நோஸ்கட்

Ajith Statement on Politics

அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவே எந்த விரும்பமும் இல்லை என்று நடிகர் அஜித் குமார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அஜித் படம் பார்க்க பணம் கொடுக்காத தந்தையை எரித்தது, தியேட்டரில் கத்தி குத்து ஆகியவற்றை கண்டிக்காத நடிகர் அஜித் மீது எஃப்.ஐ.ஆர் போட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து திருப்பூரில் அஜித் ரசிகர்கள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தனர். அப்போது பேசிய தமிழிசை, திரைத்துறையில் மிகவும் நேர்மையான நடிகர் அஜித். பலருக்கு நல்லதை அவர் செய்துள்ளார். அவரது ரசிகர்களும் நல்லவர்கள்.

அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என பேசினார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் தமக்கு அரசியல் ஆசை துளியும் இல்லை என திட்டவட்டமாக மறுத்து அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் தனிப்பட்ட முறையிலோ, சார்ந்த திரைப்படம் மூலமாகவோ அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளவன் என்பதை அனைவரும் அறிந்ததே.

என் தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளவன். அதனால்தான் என் பெயரிலான ரசிகர் மன்றங்களையும் சில வருடம் முன் நான் கலைத்ததும் ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் விழுந்துவிடக் கூடாது என்று சிந்தித்து எடுத்த சீரிய முடிவு தான்.

இதன் பிறகும் தற்போது தேர்தல் வரும் நிலையில் என் பெயரையும், ரசிகர்களின் பெயரையும் இணைத்து ஒரு சில செய்திகள் வெளியாகி, எனக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்ற ஐயப்பாட்டை பொதுமக்களிடம் விதைக்கும்.

இத்தருணத்தில் நான் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவெனில், எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் எந்த ஆர்வமும் கிடையாது. வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே என்னுடைய உச்சபட்ச அரசியல். யாருக்கும் ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ நிர்ப்பந்தித்தது இல்லை என தெரிவித்துள்ளார்.

அஜித் முழு அறிக்கை:

You'r reading என்னுடைய தொழில் நடிப்பு மட்டுமே..... அரசியல் ஆர்வம் துளியும் இல்லை- தமிழிசைக்கு நடிகர் அஜித் நோஸ்கட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மலேசியா பத்துமலையில் தைப்பூசத் திருவிழா - மயில் காவடி, பால்குடம் எடுத்து தமிழர்கள் வழிபாடு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்