அண்டாவுல பால் ஊத்தி வேற லெவல்ல செய்யுங்க.. ரசிகர்களுக்கு சிம்பு குசும்பு வேண்டுகோள்!

Actor Silambarasan news video for his fans

வந்தா ராஜாவாகத்தான் வருவேன் பட ரிலீஸின் போது பலத்தைக் காட்ட பாக்கெட்ல வேணாம், அண்டாவுல பால ஊத்தி வேற லெவல்ல செய்யுங்க என ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் சிம்பு நடிப்பில் வரும் 1-ந் தேதி வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படம் ரிலீசாகிறது. இதையொட்டி சமீபத்தில் சிம்பு தன் ரசிகர்களுக்கு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் கட் அவுட், பேனர்,பாலாபிஷேகம், கூடுதல் டிக்கெட் கட்டணத்தில் படம் பார்ப்பது போன்ற அநாவசிய செலவுகள் வேண்டாம். அதற்குப் பதிலாக பெற்றோருக்கு வேஷ்டி, சேலை எடுத்துக் கொடுத்து ம கிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் தன் நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றி இன்று ஒரு புது வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கட் அவுட், பாலாபிஷேகம் எல்லாம் வேண்டாம் என்று முன்னர் வெளியிட்ட வீடியோவை சிலர் வேறு விதமாக விமர்சித்துள்ளனர். சிம்புக்கு இருப்பதே 2 , 3 ரசிகர்கள் தான். பப்ளிசிட்டிக்காக இப்படி கூறுகிறார் என்கின்றனர்.

அதனால தப்பு செஞ்சா திருத்திக்கனும் என்ற ரீதியில் அன்புக் கட்டளை இடுகிறேன். வேற லெவல்ல செய்யுங்க... ரோடெல்லாம் கட் அவுட் பேனர் வைங்க... பாக்கெட்ல பால் வேண்டாம்.... அண்டாவுல பால் ஊத்தி வேற லெவல்ல செய்ங்க என்ற ரீதியில் தன் உசுப்பேற்றி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் என்ன லெவல்ல செய்யப் போறாங்களோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading அண்டாவுல பால் ஊத்தி வேற லெவல்ல செய்யுங்க.. ரசிகர்களுக்கு சிம்பு குசும்பு வேண்டுகோள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அஞ்சே அஞ்சுதான்.. உலகம் முழுமைக்கும் வாட்ஸ்அப் கட்டுப்பாடு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்