`எப்படி இது முடிந்தது அனுஷ்கா - ரசிகர்களை வாய்பிளக்க வைத்த புகைப்படம்!

Anushka Shetty Stunning new look photos goes viral

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை அனுஷ்கா லைம் லைட்டுக்கு வந்துள்ளார்.

பாகுபலி படத்துக்கு பிறகு பாகமதி படத்தில் நடித்த நடிகை அனுஷ்கா அதன்பிறகு வேறு எந்தப் படங்களிலும் கமிட்டாகவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கியே இருக்கிறார் எனக் கூறப்பட்டது. இதனால் அவருக்கு விரைவில் கல்யாணம் என்றும், நடிகர் பிரபாஸையே கல்யாணம் செய்ய உள்ளார் என்றும் பேசப்பட்டது. இதற்கிடையே சத்தமில்லாமல் ஒரு காரியம் செய்துள்ளார் அனுஷ்கா. அது என்னவென்றால் பாகுபலி படத்தின் போது குண்டாக இருந்தவர், அதன்பிறகு அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதனால் தான் அவருக்கு பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மாதவனுடன் இணைந்து ‘சைலன்ட்’ என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு முன்னதாக கடுமையாக முயற்சி மேற்கொண்டு தனது உடல் உடையை குறைத்து பழைய தோற்றத்துக்கு வந்துள்ளார். அவர் உடல் எடையை குறைத்துக்கு சான்றாக நேற்று முதல் சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மிகவும் ஸ்லிம்மாக பழைய தோற்றத்துடன் வந்துள்ள அந்தப் புகைப்படத்தை அனுஷ்காவின் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அப்போ தேவசேனாவ மீண்டும் களத்துல பாக்கலாம்....

You'r reading `எப்படி இது முடிந்தது அனுஷ்கா - ரசிகர்களை வாய்பிளக்க வைத்த புகைப்படம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `இது என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது' - சுரேஷ் ரெய்னாவை கலங்கவைத்த வதந்தி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்