`பாம்பாவது.... பள்ளமாவாது.... புலியாவது... - ஹிட் அடிக்கும் விஜய் சேதுபதியின் `சூப்பர் டீலக்ஸ் டிரெய்லர்!

Vijay Sethupathis super deluxe trailer released

விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம். வசூலில் சாதனை படிக்காவிட்டாலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படம் என்ற பெருமையை பெற்றது. இந்தப் படத்துக்கு பிறகு தியாகராஜா குமாரராஜா நீண்ட நாட்களாக படம் இயக்காமல் இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் படம் இயக்கப்போவதாக அறிவித்தார். அப்படி உருவான படம் தான் `சூப்பர் டீலக்ஸ்’.

இதில் தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மலையாள சினிமாவின் மக்கள் செல்வன் ஃபகத் ஃபாசில், சமந்தா, காயத்ரி, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், பக்ஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. நடிகர்களில் தான் இத்தனை பேர் என்றால், மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே சேகர் போன்றோர் திரைக்கதை அமைத்தும், பி.சி ஸ்ரீராம், பி.எஸ் வினோத், நீரவ் ஷா ஆகியோர் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்னும் திருநங்கை கதாப்பாத்திரத்தில் முதல்முறையாக நடித்துள்ளார்.

இதன் புகைப்படம், வீடியோகள் வெளியாகி சமீபத்தில் வைரலாக பரவியது. இதேபோல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வைரலான நிலையில் தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பரபரப்பான காட்சி அமைப்புகளுக்கு மத்தியில் விஜய் சேதுபதி பின்னணியில் கதை சொல்வது போல வித்தியாசமான முறையில் டிரெய்லர் வெளியாகியுள்ளது. காட்சிகள், பின்னணி இசை என அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வருகிற மார்ச் 29-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

You'r reading `பாம்பாவது.... பள்ளமாவாது.... புலியாவது... - ஹிட் அடிக்கும் விஜய் சேதுபதியின் `சூப்பர் டீலக்ஸ் டிரெய்லர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - லோக்சபா தேர்தலில் 38 இடங்களில் அமமுக போட்டி: தினகரன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்