அசுரனுக்கு நடுவே மற்றுமொரு புதிய படம்!nbspதனுஷூக்கு ஜோடி யார் தெரியுமா

Update on Actor dhanush new movie nbsp

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடந்துவருகிறது. இந்நிலையில் மற்றுமொரு புதுப்படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொள்ள இருக்கிறார் தனுஷ். 

தனுஷூக்கு சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி 2. குறிப்பாக இந்த படத்தின் ரவுடி பேபி பாடலுக்கு செம ரெஸ்பான்ஸ். மாரி 2 வெளியான சில நாட்களிலேயே அசுரன் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் தனுஷ்.

வட சென்னை இரண்டாம் பாகம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அசுரன் ஷூட்டிங்கை தொடங்கினார் தனுஷ். வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் அசுரன் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு போவதற்கு முன்னர், இன்னொரு படத்தின் படப்பிடிப்புக்கு செல்லவிருக்கிறார் தனுஷ். 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் துரைசெந்தில் குமார் இயக்கவிருக்கும் புதிய படம் தான் அது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 6ஆம் தேதி துவங்க இருக்காம். முதற் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு பொள்ளாச்சி செல்லவிருக்கிறார்களாம். மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் தனுஷூக்கு ஜோடியாக சினேகா படத்தில் நடிக்க இருக்காராம். ஏற்கெனவே செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 



You'r reading அசுரனுக்கு நடுவே மற்றுமொரு புதிய படம்!nbspதனுஷூக்கு ஜோடி யார் தெரியுமா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `நாங்கள் வெளியேற்றினோமா; கிடையவே கிடையாது' - அஷ்வின், ஜடேஜா குறித்து நெகிழும் குல்தீப் யாதவ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்