யோகிபாபு படத்தில் ஆளும்கட்சியை சீண்டும் வசனங்கள்.. செம தைரியம் போங்க

Dharmaprabhu Official Teaser - Yogi Babu

திரைப்படங்களில் அரசியல்வாதிகளை வம்பிழுப்பதும் விமர்சிப்பதும் இப்போதைய ட்ரெண்ட் ஆகிவிட்டது. அந்தவரிசையில் யோகிபாபுவும் இணைந்துவிட்டார்.

யோகி பாபு லீட் ரோலில் நடித்திருக்கும் படம், `தர்மபிரபு'. இந்த படத்தில் யோகி பாபு எமதர்மராஜாவாக நடித்திருக்கிறார். ஶ்ரீவாரி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். தர்மபிரபு டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. நகைச்சுவை கலந்த அரசியல் வசனங்களை தெறிக்கவிட்டிருக்கிறார் இயக்குநர்.  இந்த படத்தில் ரமேஷ் திலக், அழகம்பெருமாள், கருணாகரன், ராதாரவி உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

டீசர் லின்க் : https://goo.gl/k91Zix

You'r reading யோகிபாபு படத்தில் ஆளும்கட்சியை சீண்டும் வசனங்கள்.. செம தைரியம் போங்க Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுடச்சுட மீல் மேக்கர் ஃபிரை ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்