கணித வாத்தியாராக ஹிருத்திக் ரோஷன்: உண்மைக் கதை சொல்லும் சூப்பர் 30

பிஹாரைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஆனந்த் குமாரின் வாழ்க்கை வரலாறு பாலிவுட் பிரபலம் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் ‘சூப்பர் 30’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி மிகுந்த வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

பிஹாரைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார். கணிதத்தில் பெரும் ஆர்வம் கொண்ட இவர் கணித ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். தன் இளம் வயதிலேயே படிப்பில் ஆர்வம் கொண்ட ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்தார். சேரி பகுதிகளில் உள்ள படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்களில் ஒவ்வொரு ஆண்டும் 30 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் அளவுக்கு உயர்த்தினார்.

ஆனந்த் குமாரை கவுரவிக்கும் வகையில் ‘ஃபான்டம் பிலிம்ஸ்’ தயாரிப்பில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. இதற்கான முதல் போஸ்டரில் ஆனந்த் குமாரின் இளமைக் காலத் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் உருமாறி இருக்கிறார் ஹிருத்திக். இதற்காக இவருக்கு பலர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

You'r reading கணித வாத்தியாராக ஹிருத்திக் ரோஷன்: உண்மைக் கதை சொல்லும் சூப்பர் 30 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோயிலில் கஞ்சா செடி வளர்த்த காவலாளி - பக்தர்கள் அதிர்ச்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்