தேர்தல் முடிவுக்கு பிறகு மே 24ல் ரிலீஸ் ஆகிறது ``பிஎம் நரேந்திர மோடி

PM narendra modi release on may 24

பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் வரும் 24-ம் தேதியில் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விவேக் ஓபராய், நரேந்திர மோடியாக நடித்திருக்கும் ``பிஎம் நரேந்திர மோடி'' திரைப்படம் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலை குறிவைத்தே இந்த படம் திரைக்கு வருவதாக விமர்சனங்கள் எழுந்தன. அதனால், தேர்தல் நேரத்தில் இந்த படம் வெளிவரக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன. இதனையடுத்து, படத்தை வெளியிடத் தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை போட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பட தயாரிப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், தேர்தல் ஆணையம் படத்தை பார்த்து விட்டு, படத்தை வெளியிடலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்யலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதனையடுத்து, தேர்தல் ஆணையம் படத்தை பார்த்த பிறகு, தேர்தல் நேரத்தில் படத்தை வெளியிட தடை விதித்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் தலையிட முடியாது, தேர்தலுக்கு பிறகு படத்தை வெளியிடலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்.

இந்நிலையில், பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் தேர்தல் முடிவு வெளியாகும் அடுத்த நாளில், அதாவது வரும் 24-ம் தேதியில் திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய படத்தயாரிப்பாளர் சந்தீப் சிங் “பொறுப்புள்ள குடிமகனாக, நம் நாட்டின் சட்டங்களை நாங்கள் மதிக்கிறோம். பல தடைகளுக்குப் பிறகு, படம் குறித்த ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது. அதனால், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ம் தேதிக்கு அடுத்த நாள் மே 24ல் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் சீக்கிய குடும்பம் மர்ம நபரால் சுட்டுக்கொலை

You'r reading தேர்தல் முடிவுக்கு பிறகு மே 24ல் ரிலீஸ் ஆகிறது ``பிஎம் நரேந்திர மோடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 185 பக்க நோட்டீஸ் ..! சமரசமா..? பிடிவாதமா..? என்ன பதில் சொல்வது...! குழப்பத்தில் 3 எம்எல்ஏக்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்