அதர்வாவின் 100 திரைப்படம் இன்று வெளியாகவில்லை.. சிக்கல் மேல் சிக்கல்

Atharva 100 postponed again

அதர்வா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் இன்று வெளியாக இருந்த 100 திரைப்படம் இன்று வெளியாகவில்லை. அதற்கான காரணம் தற்பொழுது தெரியவந்துள்ளது.

அதர்வா நடிப்பில் இந்த வருடம் பூமராங் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து சாம் ஆண்டன் இயக்கத்தில் `100’ திரைப்படம் மே 9ஆம் தேதியான இன்று வெளியாக வேண்டியது.

முன்னர், இப்படம் மே 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், தள்ளிப் போய்தான் மே 9ஆம் தேதியை உறுதி செய்தனர் படக்குழுவினர். நேற்று தியேட்டர்களில் புக்கிங் தொடங்கி, ரசிகர்களும் டிக்கெட் புக் செய்தனர். இந்நிலையில் இன்று படம் வெளியாகவில்லை.

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தான் படம் வெளியாகவில்லை என்று சொல்லப்படுகிறது.

போலீஸ் அதிகாரியாக அதர்வா இப்படத்தில் நடித்துள்ளார். நேற்று ப்ரீமியர்
காட்சியை பார்த்துவிட்டவர்கள், அதர்வாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துவந்த நிலையில், இன்று படம் வெளியாகாதது அதர்வாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். யோகி பாபு, ராதாரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசை சாம் சி.எஸ்.

ஒரு படம் வெளியாகும் என்று அறிவிப்பு வந்தாலும், இறுதி நேரத்தில் படம் வெளியாகாமல் போவதெல்லாம் அதிகமாக நடந்துவருகிறது. இறுதியாக, அதர்வாவின் 100 திரைப்படம் நாளை வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தள்ளிப்போகவும் வாய்ப்பிருக்கிறது. 

சீனியர் இயக்குநர் மணிரத்னத்துக்கு இது முதல்முறை! பொன்னியின் செல்வன் எக்ஸ்க்ளூசிவ் தகவல்

You'r reading அதர்வாவின் 100 திரைப்படம் இன்று வெளியாகவில்லை.. சிக்கல் மேல் சிக்கல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மு.க. ஸ்டாலினின் முதல்வர் கனவு என்றுமே பலிக்காது – ஓபிஎஸ் ஆருடம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்