ரஷ்ய நண்பருடன் திருமணமா? ஸ்ரேயா விளக்கம்

நடிகை ஸ்ரேயா சரண் தனது ரஷ்ய நண்பரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பரவிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கமளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ஸ்ரேயா. 35 வயதாகும் ஸ்ரேயா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்றும் அவர் நீண்டகாலமாக ரஷ்ய நண்பர் ஒருவருடன் பழகி வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகி வந்தன. கூடுதலாக சமூக வலைதளங்களில் ஸ்ரேயா வெளியிடும் புகைப்படங்களும் புரளிகளுக்கு வழி வகுத்தது. கூடுதலாக ராஜஸ்தானின் உதய்பூர் பகுதியில் வெகு சிறப்பாகத் திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தச் செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகளே என ஸ்ரேயா விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் ஸ்ரேயா விளக்கமளிக்கையில், "எனக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக வந்த செய்திகள் அனைத்தும் வெற்று வதந்திகளே. ராஜஸ்தானில் நனது நண்பர் ஒருவருக்கும் உறவினர் ஒருவருக்கும் என இரண்டுத் திருமண விழாக்கள் நடைபெற உள்ளது. இதற்காகத்தான் நான் தயாராகி வந்தேன். எனது திருமணத்துக்காக அல்ல" எனக் கூறினார்.

ஸ்ரேயாவுக்குத் தமிழில் விரைவில் 'நரகாசுரன்' திரைப்படம் வெளியாக உள்ளது. இதுதவிர பிப்ரவரி மாதத்தில் தெலுங்கு மொழியில் 'காயத்ரி' என்ற திரைப்படமும் ஹிந்தியில் 'தாட்கா' என்ற படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading ரஷ்ய நண்பருடன் திருமணமா? ஸ்ரேயா விளக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சச்சின் மகள் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கிய வாலிபர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்