நான் கர்ப்பமா? எப்ப கண்டுபிடித்தாய்? ட்விட்டரில் கடுப்பான சமந்தா
Samantha Akkineni shuts down pregnancy rumours like a total boss
நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்று ஆன்லைன் மீடியாவில் செய்தி வெளியானது. இதைப் பார்த்த சமந்தா உடனே கொதித்து போய் ட்விட்டரில் திட்டி தீர்த்திருக்கிறார்.
சமந்தா-நாக சைதன்யா ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆண்டில் ஒரு பேட்டியில் சமந்தா கூறுகையில், ‘‘நாங்கள் எப்போது குழந்தை பெற்று கொள்வது என்பது குறித்து முன்பே முடிவு செய்து விட்டோம். குழந்தை எப்போது பிறக்க வேண்டும் என்பதை தீர்மானித்து வைத்திருக்கிறோம். எனவே, அந்த நாள் வரும் வரை குழந்தை என்ற பேச்சுக்கு இடமில்லை’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சமந்தா நடித்த ‘ஓ பேபி’ படம் வெளியாவதற்கு முன்பு அதன் டீசர் கடந்த மாதம் வெளியானது. அதை ஷேர் செய்த, அவரது கணவர் நாக சைதன்யா அதில் சமந்தாவை ‘பேபி’ என்றே குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, ட்விட்டர் ஹேண்டிலை ‘பேபி அக்கினேனி’ என சமந்தா மாற்றியிருந்தார். இதைப் பார்த்ததும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்தி டோலிவுட்டில் பரவியது. ஆனால், ‘ஓ பேபி’ படத்தை புரமோட் செய்வதற்காகத்தான் சமந்தா இப்படி செய்திருந்தார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்று சினிமா இணையதளம் ஒன்றில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதை பார்த்து கடுப்பான சமந்தா உடனடியாக அதை டேக் செய்து, ‘டாமின்... அவர் கர்ப்பமாக இருக்கிறாரா? எப்ப நீ கண்டுபிடித்தாய்? தயவு செய்து அதை சொல்லு...’’ என்று போட்டுள்ளார்.
சமந்தா இன்னும் சிறிது காலத்திற்கு குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தனது மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ள விரும்புகிறார் என்பது அவரது கோபத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
You'r reading நான் கர்ப்பமா? எப்ப கண்டுபிடித்தாய்? ட்விட்டரில் கடுப்பான சமந்தா Originally posted on The Subeditor Tamil