நயன்தாரா நடித்த திரைப்படத்துக்கு உயர்நீதிமன்றம் தடை..! காரணம் என்ன..?

High court stayed the release of nayanthara film

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவான படம் ' கொலையுதிர்காலம்'.

இந்தப்படத்தை வெளியிட தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் கொலையுதிர் காலம் நாவலின் காப்புரிமையை அவருடைய மனைவியிடம் இருந்து வாங்கியவர் பாலாஜிகுமார். இந்நிலையில் போலாரிஸ் நிறுவனம் சார்பில் கொலையுதிர்காலம் திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

வரும் ஜூன் 14-ம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில் பாலாஜிகுமார் வழக்குத் தொடர்ந்தார். சுஜாதா நாவலுக்கு தாம் காப்புரிமை பெற்றுள்ள நிலையில், அந்தப்பெயரை பயன்படுத்தி திரைப்படம் வெளியாவது முறையல்ல என முறையிட்டார். இதனிடையே வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணசாமி, ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு கொலையுதிர்காலம் படத்தை வெளியிட தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் வரும் ஜூன் 21-ம் தேதிக்குள் மனுதாரர் புகாருக்கு பதில் அளிக்குமாறு போலாரிஸ் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆணை பிறப்பிக்கட்டது..நீதிமன்ற உத்தரவால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அடுத்து நயன்தாரா ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். Ban nayanthara film.. நயன்தாரா படத்துக்கு ஐகோர்ட் தடை..

You'r reading நயன்தாரா நடித்த திரைப்படத்துக்கு உயர்நீதிமன்றம் தடை..! காரணம் என்ன..? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி - தவான் திடீர் விலகல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்