பாக்யராஜை தகுதி நீக்கம் செய்யக்கோரும் கருணாஸ்..! அதகளமாகும் நடிகர் சங்க தேர்தல்..!

Karunas demands disqualification of bakyaraj in association election

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினரை எதிர்த்து போட்டியிடும் பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்யக்கோரி நடிகர் கருணாஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

இது தொடர்பாக, நடிகர் சங்கத் தேர்தல் நடத்தும் அதிகாரி நீதிபதி பத்மநாபனை நேரில் சந்தித்து கருணாஸ் அளித்துள்ள புகார் மனுவில், நலிந்த கலைஞர்கள் பற்றி பாக்கியராஜ் அணியினர் அவதூறு பரப்பியதாக கூறியுள்ளார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், காசுக்காக நலிந்த கலைஞர்கள் எதையும் செய்வார்கள் என பாக்கியராஜ் அணியினர் பேசியதாக சுட்டிக்காட்டினார். வெறும் 150/கலைஞர்களுக்கு மட்டும் ஐசரி கணேஷும், பாக்கியராஜும் உதவி செய்துவிட்டு 3,000 நலிந்த கலைஞர்களுக்காக்ச் உதவினோம் என பொய் கூறுவதாக கூறினார்.

நடிகர் சங்கத்தை சரத்குமாரும், ராதாரவியும் சுயநல சங்கமாக நடத்தி வந்ததாகவும் இதன் காரணமாகவே பாண்டவர் அணி உருவாக்கப்பட்டதாகவும் கருணாஸ் தெரிவித்தார். கருணாஸ் குற்றச்சாட்டுக்கு பதிலடி தர பாக்கியராஜ் அணியினர் தயாராகி வருகின்றனர்.

You'r reading பாக்யராஜை தகுதி நீக்கம் செய்யக்கோரும் கருணாஸ்..! அதகளமாகும் நடிகர் சங்க தேர்தல்..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வாக்காளர்களுக்கு பரிசாக மரக்கன்று..! அசத்தும் விழுப்புரம் எம்.பி..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்