அமேசான் காட்டுத்தீயை அணைக்க 36 கோடி ரூபாய் நிதியளித்த டிகாப்ரியோ!

Leonardo DiCaprio donates huge amount to fight Amazon rainforest fire

லியானார்டோ டிகாப்ரியோ எத்தனையோ ஹாலிவுட் படங்களில் அசத்தலாக நடித்திருந்தாலும், இன்றும் இவரை டைட்டானிக் ஹீரோ என்றே தான் அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது.

பிரேசிலில் உள்ள அமேசான் காடுகள் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே காட்டுத் தீயினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த ஒரு கோரமான காட்டுத்தீ விபத்தால், கிட்டத்தட்ட 2.3 மில்லியன் ஏக்கர்கள் கருகி சாம்பலாகி உள்ளன.

காட்டில் உள்ள விலங்குகளும் கருகி அழிந்துள்ளது உலக நாடுகளை சோக மயமாக்கி உள்ளது.

இந்நிலையில், அமேசான் காடுகளில் உள்ள தீயை அணைக்க போராடி வரும் குழுவுக்கு தனது சார்பாக 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 36 ஆயிரம் கோடி) தொகையை நிதியாக அளித்துள்ளார் டிகாப்ரியோ.

பருவநிலை மோசமாகி வருவது குறித்து ஐநா சபையில் இவர் ஆற்றிய உரை அனைவராலும் பாராட்டப் பெற்றது.

இயற்கை ஆர்வலரான டிகாப்ரியோ, அமேசான் காடுகள் தீயில் கருகி வரும் காட்சியை ஆகாய மார்க்கமாக படம் பிடித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியாகியுள்ள ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் திரைப்படம், வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அடுத்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கும் டிகாப்ரியோ தேர்வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட்!

You'r reading அமேசான் காட்டுத்தீயை அணைக்க 36 கோடி ரூபாய் நிதியளித்த டிகாப்ரியோ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தரக்குறைவாக பேசிய டிராபிக் போலீசுக்கு தக்க பாடம் புகட்டிய விஜய் பட இயக்குநர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்