இறுதிச்சுற்று இயக்குநர் படத்தில் 2வது முறையாக இணைந்த பிரபலம்!

Actor kaali venkat joins in Surarai potru

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரை போற்று படத்தில் நடிகர் காளி வெங்கட் இணைந்துள்ளார்.

மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி இந்திய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இறுதிச்சுற்று திரைப்படத்தில், ரித்திகா சிங்கின் தந்தையாக காமெடி நடிகர் காளி வெங்கட் நடித்திருந்தார். அந்த படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் சூரரை போற்று படத்திலும் நடிகர் காளி வெங்கட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

சூர்யாவின் சூரரை போற்று படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் காளி வெங்கட் இயக்குநர் சுதா கொங்கரா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

சூர்யாவின் நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து, சூரரை போற்று திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading இறுதிச்சுற்று இயக்குநர் படத்தில் 2வது முறையாக இணைந்த பிரபலம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 400 கோடி கிளப்பில் இணைந்த சாஹோ!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்