ரசிகர்கள் இனி பேனர் மற்றும் கட் அவுட்கள் வைக்கக் கூடாது!

Suriya requests his fans to dont put banners and cutouts hereafter

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இன்று காப்பான் படத்தின் இரண்டாவது டிரைலர் பிரஸ் மீட்டுடன் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய நடிகர் சூர்யா, ரசிகர்கள் யாரும் இனி பேனர்களோ கட் அவுட்களோ தயவு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

பேனர்களுக்கு ஆகும் செலவை கல்விக்காக போராடும் ஏழை மாணவர்களுக்கு செலவு செய்யுங்கள் என்றும் தனது கோரிக்கை நடிகர் சூர்யா வைத்தார்.

பல்லாவரம் ரேடியல் சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் தேசத்தையே உலுக்கி உள்ள நிலையில், அரசியல் பேனர்கள் மற்றும் இன்றி சினிமா பேனர்களுக்கும் தடைவிதிக்க வேண்டும் என்ற கோஷம் எழுந்துள்ளது.

நடிகர் விவேக்கும் இதனை வலியுறுத்தி பேசியிருந்த நிலையில், தற்போது சூர்யா, அடுத்த வாரம் வெளியாகவுள்ள காப்பான் படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு ஊர்களில் பேனர்கள் மற்றும் போட்டா போட்டி கட் அவுட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சூர்யாவின் கோரிக்கையை அவரது உண்மையான ரசிகர்கள் மதிக்கின்றனரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

You'r reading ரசிகர்கள் இனி பேனர் மற்றும் கட் அவுட்கள் வைக்கக் கூடாது! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரசிகர்கள் ஆசையை உடனடியாக நிறைவேற்றிய சூர்யா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்