விஜய், விஜய்சேதுபதி நடிக்கும் தளபதி 64... படப்பிடிப்பு தொடக்கம்...

Vijay Vijay Sethupathi joined New Film

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் தொடக்க விழா படப்பிடிப்புடன் இன்று சென்னையில் தொடங்கியது. இதில் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார்.

வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக விருக்கும் தளபதி 64 திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின்ராஜ் படத்தொகுப்பும் கவனிக்கின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று (அக்.3)ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தளபதி 64 படத்தின் பூஜை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

விஜய்யும், விஜய் சேதுபதியும் முதன்முறை யாக நேருக்கு நேர் மோதவிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

You'r reading விஜய், விஜய்சேதுபதி நடிக்கும் தளபதி 64... படப்பிடிப்பு தொடக்கம்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் எப்போது?... ரிலீஸ் தேதியை அறிவித்தார் கவுதம் மேனன்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்