100 கோடியைக் கூட எட்டாமல் அவுட் ஆன பேட் மேன்

பாலிவுச் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான ‘பேட்மேன்’ திரைப்படம் எதிர்பார்த்த வசூல் சாதனையை எட்டவில்லை.

நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் பாலிவுட் திரைப்படமாக வெளிவந்திருக்கும் படம் ‘பேட்மேன்’. மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் மற்றும் அதனது சுகாதாரப் பயன்பாடு குறித்து ஒரு தமிழரின் பெருமையை எடுத்துக்கூறும் திரைப்படமாக ‘பேட்மேன்’ வெளியானது. இப்படம் இந்தியாவில் பல தரப்பினரின் ஆதரவையும் பெற்று வெளியாகி திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இத்திரைப்படம் எதிர்பார்த்த வசூல் சாதனையை நிகழ்த்தவில்லை என பாலிவுட் வருத்தத்தில் உள்ளது. திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், இதுவரையில் 'பேட்மேன்' 100 கோடி ரூபாய் கூட வசூல் செய்யவில்லை.

இதுவரையில் ‘பேட்மேன்’ 71.90 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ‘பேட்மேன் சேலஞ்சு’, சர்வதேச பேட்டிகள், சானிட்டரி நாப்கின் குறித்த பாடல் என அனைத்தும் எதிர்பாரா ஹிட் அடித்தும் படம் வசூல் தராதது படக்குழுவினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

You'r reading 100 கோடியைக் கூட எட்டாமல் அவுட் ஆன பேட் மேன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புவனேஷ், சஹால், கோலி எனக் கொண்டாடினோமே; 'தல' தோனியின் 'இந்த' சாதனையை கவனித்தோமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்