பொங்கலுக்கு ரஜினி-தனுஷ் மோதல்? ரசிகர்களிடையே பரபரப்பு...

Dharbar Vs Pattas on Pongal

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. அனிரூத் இசை அமைத்திருக்கிறார். வரும் பொங்கல் தினத்தில் படம் திரைக்கு வருகிறது.

ரஜினி படத்தை முதன்முறையாக ஏ.ஆர்.முருக தாஸ் இயக்கியிருப்பதால் இது ரசிகர்களிடைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் இப்படத்தின் டப்பிங்கை பேசி முடிக்க உள்ளார் ரஜினி. ஒரே கட்டமாக டப்பிங் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் தர்பார் படத்துடன் தனுஷ் நடிக்கும் புதிய படம் மோதவிருப்பதாக தகவல் வெளியாகி ஊள்ளது. துரை செந்தில்குமார் இயக்கியுள்ள படம் பட்டாசு.

இதில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்திருக்கி றார். சினேகா, மெஹரின் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது, மாமனார் ரஜினி படத்துடன் மருமகன் தனுஷ் படம் மோதும் என்ற தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் இந்த மோதல் கடைசி நேரத்தில் மாறுமா என்பது தெரியவில்லை.

ரஜினியின் பேட்ட படம் வெளியான அதேநாளில் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியானது. இரண்டு படமும் ஹிட்டானலும் பேட்ட படத்தை விட விஸ்வாசம் கூடுதலாக வசூல் செய்தது. மீண்டும் இப்படியொரு பேச்சுக்கு ரஜினி பட தரப்பு மீண்டும் இடம் தராது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading பொங்கலுக்கு ரஜினி-தனுஷ் மோதல்? ரசிகர்களிடையே பரபரப்பு... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராகுல் மீதான அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்