பிக் பாஸ் காஜல் நடிப்பில் வெளியாகும் புதிய படத்தின் டீசர்!

'பிக் பாஸ்' புகழ் காஜல் பசுபதி நடிப்பில் வெளிவரவிருக்கும் 'ஒன்றா இரண்டா ஆசைகள்' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகியுள்ளது.

'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான காஜல் பசுபதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் 'ஒன்றா இரண்டா ஆசைகள்' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

காதலர் தினத்தன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டத் வெளியானதை அடுத்து இன்று டீசர் வெளியாகியுள்ளது. 

48 ஃப்ரேம்ஸ் கம்பெனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அபிலேஷ் ரவி இயக்கியுள்ளார். அஷ்வின் ஜெரோம் என்ற புதுமுக நாயகன் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

ராஜ் கே.சோழன் இத்திரைப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இன்னும் இரண்டு மாத காலங்களில் இத்திரைப்ப்டம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

You'r reading பிக் பாஸ் காஜல் நடிப்பில் வெளியாகும் புதிய படத்தின் டீசர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கமல் பாவம் தொலைக்க ராமேஸ்வரம் சென்றாரா? - அமைச்சர் பேச்சால் சர்ச்சை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்