இளையராஜாவின் சைக்கோ பட பாடலுக்கு திடீர் கிராக்கி... ரசிகர்கள் கொண்டாட்டம்...

Ilayarajas Musical Psycho Movie Song Unna Nenachu Become Hit

80களில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. அத்துடன் அந்த காலகட்டத்தோடு அப்பாடல்கள் நின்றுவிடாமல் காலம்காலமாக தொடர்கிறது.
இன்றைக்கும் இரவு நேரத்தில் ராஜா இசையை கேட்டபடி தூங்கச் செல்பவர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். சமீபத்தில் பல படங்களில் பல்வேறு காட்சிகளில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மிஷ்கின் இயக்கும் சைக்கோ படத்திற்காக இளையராஜா இசை அமைத்தி ருக்கும் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது.
"உன்ன நெனச்சி நெனச்சி உருகிப் போனேன் மெழுகா...* என்ற அந்த பாடல் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கபிலன் எழுதியிருக்கும் இந்த பாட்டை சித்து ஸ்ரீராம் பாடி உள்ளார்.
இப்பாடலை கேட்டவர்கள் பழைய ராஜா வந்துவிட்டார்... மீண்டும் தமிழ் திரையுலகில் ஒரு ராஜாங்கம் துவங்குகிறது என்று அவரது ரசிகர்கள சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டு வருகின்றனர்.
சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோ வாக நடிக்க அதிதி ராவ், நித்யா மேனன் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இயக்குநர் ராம், சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

You'r reading இளையராஜாவின் சைக்கோ பட பாடலுக்கு திடீர் கிராக்கி... ரசிகர்கள் கொண்டாட்டம்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராணா, நானி வீடுகளில் வருமான வரி சோதனை.. திரையுலகில் பரபரப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்