ஐஸ்வர்யாராயை தொடர்ந்து சினிமாவுக்கு வரும் உலக அழகி... 2,0 வில்லன் ஜோடியாக நடிக்கிறார்..

Miss World Manushi Chhillar in Prithviraj

உலக அழகி ஐஸ்வர்யாராய் தமிழ், இந்தி என இந்திய திரையுலகில் ஒன்றுக்கு இரண்டு ரவுண்டு வந்துவிட்டார்.

இப்போது குடும்பம் குழந்தை என்றாகிவிட்டாலும் அவ்வப்போது படங்கள், உலக பட விழாக்கள் என்று தலை காட்டிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் புதிய உலக அழகி மனுஷி சில்லர். திரை யுலகிற்குள் காலடியெடுத்து வைக்கிறார். அரியானாவை சேர்ந்த இவர் கடந்த 2017ம் ஆண்டு உலக அழகியாக தேர்வானவர்.

வரலாற்று படமாக உருவாகிறது இந்தியில் உருவாகிறது பிருத்விராஜ். பிரித்விராஜ் சவுஹான் மன்னனின் வாழ்க்கையை மைய மாக கொண்டு சரித்திர படமாக இது உருவாகி றது. இப்படத்துக்கு பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். இவர் ரஜினிக்கு வில்லனாக 2.0 படத்தில் நடித்தவர். பிரித்விராஜ் படத்தில் இளவரசி சன்யோகிதாவாக நடிக்கிறார் மனுஸ்ரீ சில்லர். இப்படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்குகிறார்.

யஷ்ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்ய சோப்ரா தயாரிக்கும் பிருத்வி படத்தின் தொடக்க விழா மும்பையில் நடந்தது. இளவரசி வேடம் ஏற்கும் மனுஸ்ரீ சில்லர் அதற்காக பல்வேறு பயிற்சிகள் பெற்று வருகிறார்.

You'r reading ஐஸ்வர்யாராயை தொடர்ந்து சினிமாவுக்கு வரும் உலக அழகி... 2,0 வில்லன் ஜோடியாக நடிக்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் நவ.27ல் விண்ணில் ஏவப்படும்.. இஸ்ரோ தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்