இயக்குனரின் தங்கையை மணந்தார் காமெடி .. காதல் திருமணமா?

Comedy Actor Sathish gets married to Sindhu

மெரினா, எதிர்நீச்சல், நய்யாண்டி, ஆம்பள, கத்தி, பைரவா, கொரில்லா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பவர் சதீஷ். தனது திருமணத்துக்காக பெண் தேடியும் செட்டாகாமல் காத்திருந்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தனக்கும் சிக்சர் பட இயக்குனர் சாச்சியின் தங்கை சிந்துவுக்கும் திருண நிச்சயதார்த்தம் நடந்ததாக சதீஷ் தெரிவித்திருந்தார்.
சிக்சர் படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்க காமெடி வேடத்தில் சதீஷ் நடித்திருந்தார். இதனால் சதீஷ், சிந்துவுக்கு காதல் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதை சிந்துவின் அண்ணன் சாச்சி மறுத்திருந்ததுடன் பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம் என குறிப்பிட்டிருந்தார். இந்நலையில் சதீஷ், சிந்து திருமணம் சென்னை வானகரத்தில்
இன்று காலை வைதீக முறைப்படி நடந்தது.
இதில் நடிகர்கள் சத்யராஜ், விஜய்சேதுபதி, உதநிதிய ஸ்டாலின், சிவகார்த்திகேயன், ஜீவா. ஜீ.வி.பிரகாஷ், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டு புதுமணமக்களை வாழ்த்தினார்கள்.

You'r reading இயக்குனரின் தங்கையை மணந்தார் காமெடி .. காதல் திருமணமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அ.தி.மு.க.வுக்கு எதுக்கு அண்ணா? ஸ்டாலின் கேள்வி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்