ஆளவந்தான் மொட்டை கமல் மீண்டும் வருகிறார்.. பட நீளத்தை குறைத்து ரீரிலீஸ் செய்ய முடிவு.

கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து 2001ம் ஆண்டு திரைக்கு வந்த படம் ஆளவந்தான். இதன் கதை, திரைக்கதை, வசனத்தை கமலே எழுதியிருந்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு ரொம்பவும் மெனக்கெட்டார் கமல். கட்டுமஸ்தான உடற்கட்டுக்கு மாறியதுடன் மொட்டையும் அடித்தக் கொண்டு நடித்தார். ஆனால் படம் பிளாப் ஆனது.

இதற்கிடயில் இப்பட தயாரிப்பாளர் எஸ்.தாணுவுக்கும், கமலுக்கும் பிரச்னை எழுந்தது. ஆளவந்தான் தோல்வியால் தனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தாணு பகிரங்கமாக கூறினார். பெட்டிக்குள் சுருண்டு கிடந்த இப்படத்தை மீண்டும் தூசி தட்டி எடுக்கிறார்கள். படத்தில் சில கட்சிகளை குறைத்து. சில டிஜிட்டல் யுக்திகளையும் புகுத்தி இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் ரீரிலிஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம்.

You'r reading ஆளவந்தான் மொட்டை கமல் மீண்டும் வருகிறார்.. பட நீளத்தை குறைத்து ரீரிலீஸ் செய்ய முடிவு. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தல நடிக்கும் வலிமை மாஸ் கதையாக உருவாகிறது.. தயாரிப்பாளர் தகவல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்