பைனான்சியர் அன்பு வீட்டில் ரூ.65 கோடி பறிமுதல்.. வருமானவரித் துறை நடவடிக்கை

பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் இருந்து ரூ.65 கோடி வரை கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடித்த பிகில் படம் கடந்த ஆண்டில் நல்ல வசூலை கொடுத்த படங்களில் ஒன்று. இந்த படத்தில் விஜய் அதிகமான சம்பளம் பெற்று அதை முறைப்படி வருமான வரித் துறைக்கு கணக்கு காட்டவில்லை என்ற தகவல் அந்த துறைக்கு கிடைத்தது. இதையடுத்து, பிகில் படத் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம், இந்த படத்திற்கு நிதியுதவி அளித்த பைனான்சியர் மதுரை அன்பு எனப்படும் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தலைமை அலுவலகம், தியேட்டர்கள், அதன் உரிமையாளர் கல்பாத்தி அகோரம் வீடுகளில் நேற்று காலை முதல் வருமானவரிச் சோதனை நடைபெற்றது. அதே சமயத்தில், பைனான்சியர் அன்புவின் வீடுகளிலும், விஜய் வீடுகளிலும் வருமானவரிச் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் அன்பு வீடுகளில் இருந்து மட்டும் மொத்தம் ரூ.65 கோடி வரை கணக்கில் காட்டாத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமானவரித் துறை தகவல் தெரிவிக்கிறது.
இதே போல், நடிகர் விஜய் வீட்டிலும் கணக்கில் காட்டப்படாத பணம், நகைகள் கைப்பற்றதாகவும் கூறப்படுகிறது.

You'r reading பைனான்சியர் அன்பு வீட்டில் ரூ.65 கோடி பறிமுதல்.. வருமானவரித் துறை நடவடிக்கை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பழங்குடியின சிறுவனிடம் காலணியை கழட்டி விடச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்