ஜோக்கர் பட நாயகனுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு

ஆஸ்கர் திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கா் விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது. இதில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்ஸ் பெற்றார்.


சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை, ஜுடி என்ற படத்தில் நடித்த ரெனிஜெல்வேகஜர் பெற்றார். சிறந்த படத்திற்கான விருது பாரசைட் படத்திற்கு கிடைத்தது. இதன் இயக்குனர் போங்ஜுனுக்கு சிறந்த இயக்குனர் விருது கிடைத்தது. சிறந்த கதை வசனத்திற்கான விருதும், இந்த படத்திற்கே கிடைத்தது.

மேலும், சிறந்த ஒளிப்பதிவு, இசை, ஒப்பனை, ஆடைவடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் முதலிடம் பிடித்தவர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

You'r reading ஜோக்கர் பட நாயகனுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உட்கட்சி தேர்தல் குறித்து விவாதிக்க பிப்.17ல் திமுக மாவட்ட செயலர் கூட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்