தமிழ் நடிகை திருமண கொண்டாட்டம் கேன்சல். கொரோன வைரஸ் எதிரொலி..

பழம் பெரும் மலையாள பட நடிகை ஊர்மிளா அவரது மகள் உத்ரா உன்னி. இவர் தமிழில் வவ்வால் பசங்க என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கும் நிதிஷ் நாயருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமண விழாவில் பங்கேற்க உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பினர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பீதி ஏற்படுத்தி வருகிறது. கேரளாவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உத்ரா உன்னி தனது திருமண கொண்டாட்டத்தை தள்ளிவைத்திருப்பதுடன் யாரையும் கொண்டாட்ட விழாவுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். கொரோனா பீதி தீர்ந்த பிறகு கொண்டாட்ட விழா நடக்கும். ஆனால் குறிப்பிட்ட தேதியில் கோவிலில் வைத்து தாலி கட்டு திருமண நிகழ்ச்சி மட்டும் நடக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.

You'r reading தமிழ் நடிகை திருமண கொண்டாட்டம் கேன்சல். கொரோன வைரஸ் எதிரொலி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வாகிறார்.. பொருளாளர் டி.ஆர்.பாலு?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்