ஏ. ஆர்.முருகதாஸுக்கு பாதி சம்பளம் தான்..

Thalapathy 65: Vijay and AR Murugadoss to team up for the fourth time is it Thuppakki 2?

விஜய் படம் இயக்க சம்மதமா?

பிகில் படத்தை முடித்த கையோடு மாஸ்டர் படத்தில் நடிக்கத் தொடங்கிய விஜய் மாஸ்டர் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் மாஸ்டர் படத்தை முடித்து விட்டு அடுத்த படம் பற்றி உறுதி செய்யாமல் இருக்கிறார் விஜய். அநேகமாக ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றன.ஏற்கெனவே விஜய் நடித்த படத்தைத் தயாரித்த பிரபல டிவி நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரிக்கிறதாம்.
இப்படத்தை இயக்குவது பற்றித் தயாரிப்பு நிறுவனம். முருகதாஸிடம் பேசியபோது அவர் தர்பார் படத்துக்கு 35சி வாங்கினேன் அதே சம்பளம் அல்லது கொஞ்சம் குறைத்து வாங்கிக்கொள்கிறேன் என்றாராம். அதற்குச் சம்மதிக்காத நிறுவனம் பிறகு பேசுகிறோம் என்று கூறிவிட்டார்களாம். சரி என்று சொல்லி போனைவைத்து விட்டாராம் முருகதாஸ். மறுநாள் போன் என்று எதிர்பார்த்த வருக்கு ஏமாற்றமே மிச்ச மானது. இப்படியே இரண்டு நாள் கழிந்ததால் பயந்து போன இயக்குனர் தானே போன் செய்து விசாரித்தார். அதற்குப் பிடிகொடுக்காமல் அவர்கள் பேசியதால் நீங்களே சம்பளத்தைக் கூறுங்கள் என்றார்.

அதற்கு அவர்கள் 18சி தான் சம்பளம் இஷ்டமிருந்தால் செய்யுங்கள் இல்லாவிட்டால் பரவாயில்லை என்று கூறினார்களாம்.உடனே முருகதாஸ் ஓகே சொல்லிப் பட வேலைகளைத் தொடங்கிவிட்டாராம். அநேகமாக இது துப்பாக்கி 2ம் பாகமாக இருக்கும் என்று தெரிகிறது.

You'r reading ஏ. ஆர்.முருகதாஸுக்கு பாதி சம்பளம் தான்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 100 கி.மீ. நடந்தே சென்ற கர்ப்பிணிக்கு உதவிய மக்கள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்