முன்னாள் முதல்வர் மகன் நடிகர் திருமணம்.. போலீஸ் நடவடிக்கை.

ACTOR FORMER CMS SON NIKHIL GETS MARRIED, POLICE REPORT SOUGHT

கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மகனும், கன்னட நடிகருமான நிகில் குமாரசாமிக்கும், கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் உறவுக்கார பெண் ரேவதிக்கும் பண்ணை வீட்டில் திருமணம் நடந்தது.

கொரோனா ஊரடங்கு 14ம் தேதி முடிந்தவுடன் தடபுடலாக திருமணத்தை நடத்தக் குமாரசாமி எண்ணியிருந்தார் ஆனால் ஊரடங்கு முடியாமல் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால் உறவினர்கள் மட்டும் பங்கேற்க இந்த திருமணம் நடந்தது. இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிந்ததும் திருமணம் பற்றி விசாரிக்கத் தொடங்கி உள்ளனர். ஊரடங்கு அறிவித்த நிலையில் திருமணம் நடத்தத் தடை உள்ளது. அதை மீறி திருமணம் நடத்தியதற்கு உயர் அதிகாரிகளிடம் மேலிடத்திலிருந்த விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதனால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You'r reading முன்னாள் முதல்வர் மகன் நடிகர் திருமணம்.. போலீஸ் நடவடிக்கை. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய்சேதுபதி இயக்குநரின் 2 புதிய படங்கள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்