வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்த பாகுபலி இயக்குனர்.. சவாலை நிறைவேற்றினார்..

bagupali director throw challenge to ramcharan, keeravaani

சுமார் ரூ 250 கோடிக்கும் அதிகமான செலவில் உருவான படம் பாகுபலி. பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடித்த இப்படத்தை ராஜமவுலி இயக்கினார். தற்போது ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். ராம்சரண், ஜூனியர் என் டி ஆர் நடிக்கின்றனர். கொரோனா ஊரடங்கில் வீட்டில் ஆர் ஆர் ஆர் படத்தின் அடுத்துக் கட்ட பணிகள் குறித்துத் திட்டமிட்டு வருகிறார் ராஜமவுலி. ஆனால் அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அவருக்கு ஒரு சவால் விட்டார். தான் வீட்டு வேலைகளைச் செய்த வீடியோவை வெளியிட்டு 'இதுபோல் நீங்களும் வீட்டுவேலைகளைச் செய்து வீடியோ வெளியிட வேண்டும்' என்றார். அந்த சவாலை ஏற்றுக்கொண்ட ராஜமவுலி தனது வீட்டைத் துடைப்பத்தால் சுத்தப்படுத்தியும், கதவு ஜன்னல்களைத் துடைத்தும் வீடியோ எடுத்துப் பகிர்ந்ததுடன் இசை அமைப்பாளர் கீரவாணி, நடிகர் ராம் சரண் ஆகியோருக்கு இதேபோல் சவாலைத் திருப்பி விட்டிருக்கிறார்.

You'r reading வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்த பாகுபலி இயக்குனர்.. சவாலை நிறைவேற்றினார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினிக்கு வில்லன் யார்? ஜெயம் ரவி வில்லன் திடீர் விளக்கம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்