வேல்முருகன் பாடகரின் பச்சை மண்டலம்..

Vel Murugan acted Short Film Pachachaimandalam without salary

சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் மதுரை குலுங்க என்ற பாடல் பாடியதுடன் 300க்கும் மேற் பட்ட படங்களில் பாடியிருப்பவர் வேல் முருகன். தர்ம பிரபு போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார். இவர் கொரோனா நோய் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு குறும்படம் பச்சை மண்டலம் சம்பளமே இல்லாமல் நடித்து கொடுத்துள்ளார். கொரோனா நோய்க்காக பல்வேறு தனிப் பாடல்கள் வெளியிடப்பட்டாலும் வேல் முருகன் நடித்து வெளியாகியிருக்கும் பச்சை மண்டலம்.


கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தவர்களையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து அவரை விலக்கி வைக்கின்றனர். அது மனிதாபமற்ற செயல் என்பதை மையமாக வைத்து இக்குறும்படம் படமாகி இருக்கிறது. அரசு அதிகாரிகளும் மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் இதற்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஷில்டன் தேவராஜ் இயக்கியுள்ள இக்குறும்படத்தை கைஷோ கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.நாக சுப்பிரமணியம் கதை எழுதித் தயாரித்துள்ளார். கண்மணி ராஜா திரைக்கதை வசனத்தை எழுதி இருக்கிறார். தஜ்மீல் ஷெரீப் இசை. இதில் சிற்றரசு, ரம்யா, சிவரஞ்சனி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.

You'r reading வேல்முருகன் பாடகரின் பச்சை மண்டலம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருநங்கைகளை அக்கா.. தங்கையாக ஏற்ற காமெடி நடிகர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்