வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் மோதல்.. ஒருமையில் பேசி விரட்டிய நடிகை..

Vanitha, Lakshmi Ramakirishnan Dierect Clash

நடிகை வனிதா 3வது திருமண விவகாரம் இணைய தளத்தில் டிரண்டிங் ஆகும் அளவுக்கு மோதலை கிளப்பி விட்டிருக்கிறது. கஸ்தூரியுடன் மோதி அவரை திட்டித்தீர்த்த வனிதா அடுத்து லட்சுமி ராமகிருஷ்ணனை ஒருமையில் பேசி விரட்டியடித்தார்.வனிதா திருமணம் பற்றி லட்சுமி ராம கிருஷ்ணன் விமர்சனம் செய்தார். அதற்கு ஏற்கனவே பதில் அளித்த வனிதா என் வாழ்கையில் தலையிட நீங்கள் யார் என்றார்.

இந்நிலையில் இருவரும் நேருக்கு நேர் வீடியோவில் பேசினர். அது கடும் மோதலில் முடிந்தது. என் வாழ்கையைப் பற்றிப் பேச நீ யார், உனக்கு ஒரு புருஷன் என்கிறாய் ஆனால் உன்னைப்பற்றிச் சொன்னால் என்னவாகும். இதே திரையுலகில் தான் நான் இருக்கிறேன். என் கணவரை அசிங்கம் என்கிறாய் உன் கணவர் தான் கேடுகெட்ட அசிங்கம் எனச் சரமாரியாகத் திட்டித்தீர்த்தார். வனிதாவின் ஏச்சையும் பேச்சையும் தாங்க முடியாமல் இணைப்பைத் துண்டித்துவிட்டு லட்சுமி ராம கிருஷ்ணன் எழுந்து சென்றார்.இப்படியே மோதல் நீடிக்க இருவரும் ஒருமையில் திட்டிக்கொண்டனர். இது திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் மோதல்.. ஒருமையில் பேசி விரட்டிய நடிகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபல நடிகருக்கு டான்ஸ் மாஸ்டரின், அண்ணே வெயிட்டு வெயிட்டு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்